×

உழைப்பாளர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


சென்னை: உழைப்பாளர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து திமுக தலைவர் – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவு: “குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் # labourday-இல் வாழ்த்திப் போற்றுவோம்! மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க – ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்!

The post உழைப்பாளர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Labor Day ,Chennai ,M.K.Stalin ,DMK ,President ,Tamil Nadu ,#laborday ,
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை...